ரேசன் அரிசி தொடர்பாக அரசின் புதிய அறிவிப்பு

70-30 என்ற விகிதத்தில் புழுங்கல் அரிசியும், பச்சரிசியும் வழங்க வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக கிடங்கு பொறுப்பாளர்களுக்கு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. இந்திய உணவு கழகத்தில் இருந்து 70:30 என்ற விகிதத்தில் புழுங்கல் அரிசி, பச்சரிசி பெறப்படுகிறது. இதன்படி 20 கிலோ அனுமதிக்கப்படும் குடும்ப அட்டையில் இனி 14 கிலோ புழுங்கல் அரிசி, 6 கிலோ பச்சரிசி கிடைக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Close