சாலையில் நின்று போட்டோ எடுத்துக்கொண்டிருந்தவரை மிதித்து கொன்ற யானை..! (பரபரப்பு வீடியோ)

மேற்குவங்க மாநிலம் ஜல்பைகுரி மாவட்டத்திற்கு உட்பட்ட லடாகுரி வனப்பகுதி யானைகள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியாகும்.இப்பகுதியில் தேசிய நெடுஞ்சாலையை கடந்த யானை ஒன்றை ஜல்பைகுரி வங்கி ஒன்றில் பாதுகாவலராக பணியாற்றும் சாதிக் ரஹ்மான் என்பவர் காரில் இருந்து இறங்கி புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தார். அப்போது சீற்றத்துடன் அவரை நோக்கிச் சென்ற காட்டுயானை அவரை சரமாரியாக மிதித்துக் கொன்றது.

இந்தக் காட்சிகளை அந்த வழியாகச் சென்றவர்கள் செல்ஃபோன்களில் படம் பிடித்து இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர்.

Close