எகிப்து பள்ளிவாசல் தாக்குதல்… பலி எண்ணிக்கை 305 ஆக உயர்வு!

எகிப்தில் வெள்ளியன்று மசூதி ஒன்றில் நடந்த குண்டு வெடிப்பில் பலியானோரின் எண்ணிக்கை 305 ஆக உயர்ந்துள்ளது.

எகிப்து நாட்டின் வடக்கு சினாய் மாகாணத்தில் உள்ள பிர் அல்-அபேத் நகரில் உள்ள மசூதி ஒன்றில் வெள்ளிக்கிழமை அன்று பிராத்தனை நடைபெற்றுக் கொண்டிருந்த போது சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. இதில் பலர் உயிரிழந்தனர். மேலும் காயமடைந்த நிலையில் வெளியே ஓடி வந்தவர்களை மசூதியை சூழ்ந்திருந்த தீவிரவாதி துப்பாக்கியால் சுட்டனர். இந்த தாக்குதலில் 235 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த 120-க்கும் மேற்பட்டோரில் பலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து சம்பவ பகுதியில் அவசர நிலை அமல் செய்யப்பட்டுள்ளது. 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என எகிப்து அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில் இந்த குண்டு வெடிப்பில் பலியானோரின் எண்ணிக்கை தற்போது 305 ஆக உயர்ந்துள்ளது.

Close