உலக பொருளாதார நாடுகளின் பட்டியல்… பின்னடைவில் இங்கிலாந்து!

உலகின் முன்னணி பொருளாதார நாடுகள் பட்டியலில் பிரிட்டன் டாப் 5 நாடுகளின் பட்டியலில் இருந்து பலவருடங்களுக்குப் பின் வெளியேறியுள்ளது. இது இந்நாட்டின் நாணய மற்றும் பொருளாதார வளர்ச்சி சரிவுக்கு வித்திட்ட ஐரோப்பா யூனியன் நாடுகளில் இருந்துவெளியேறியதால் ஏற்பட்ட மாற்றங்கள். இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பிலிப் ஹாம்மாட்

பிரிட்டன் நாட்டின் நிதியமைச்சரான பிலிப் ஹாம்மாட் உலகின் முன்னணி 5 பொருளாதார நாடுகளின் பட்டியலில்இருந்து பிரிட்டன் வெளியேறியுள்ளது என்ற செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

தற்போது பிரிட்டன் 6வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

புதிய பட்டியல்

சர்வதேச நாணய நிதியம் வெளியிட்ட புதிய உலகின் முன்னணி 5 பொருளாதார நாடுகளின் பட்டியலில் பிரிட்டன்நாட்டைப் பின்னுக்குத் தள்ளி பிரான்ஸ் முந்தியுள்ளது. இதன் வாயிலாகவே பிரிட்டன் வெளியேறியுள்ளது.

ஜிடிபி

ஐஎம்எப் எனக் கூறப்படும் சர்வதேச நாணய நிதியம் மொத்த உள்நாட்டு உற்பத்தியை அடிப்படையாகக் கொண்டு புதியபட்டியவை வெளியிட்டுள்ளது. இதில் பிரிட்டன் நாடு 2013க்குப் பின் பிரிட்டன் பொருளாதார வளர்ச்சியில் பெரியஅளவிலான பின்னடைவை சந்தித்துள்ளது.

டாப் 5 நாடுகள்

ஐஎம்எப் அமைப்பின் 2017ஆம் ஆண்டின் ரேட்டிங் அடிப்படையில்

அமெரிக்கா, சீனா மற்றும் ஜப்பான் ஆகியநாடுகள் முதல் 3 இடத்தையும், ஜெர்மன் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் 4 மற்றும் 5வது இடத்தைப் பெற்றுள்ளது. பிரிட்டன் நாடு தற்போது 6வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

12 சதவீத சரிவு

ஐரோப்பிட யூனியன் நாடுகளில் இருந்து பிரிட்டன் தனியாகப் பிரிக்கப்பட முடிவு செய்யப்பட்ட பின், அதாவது ஜூன் 2016 பின் பிரிட்டன் நாட்டின் நாணயம் சுமார் 12 சதவீதம் வரையில் சரிந்துள்ளது.

பணவீக்கம்

பிரிக்சிட் பின்னர்ப் பிரிட்டன் நாட்டின் இறக்குமதி பொருட்களுக்கான விலை அதிகளவில் அதிகரித்துள்ளது. இதுமட்டும்அல்லாமல் பிரிட்டன் மக்களின் சம்பளம் மற்றும் பணவீக்கம் மத்தியிலான வித்தியாசம் 3 சதவீதத்தைத் தாண்டியுள்ளது.

கடன்

2021-22ஆம் ஆண்டிற்குள் பிரிட்டன் 29.1 பில்லியன் பவுண்டு அளவிலான பணத்தைக் கடன் பெறும் கணிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அடுத்தச் சில வருடங்களுக்கு இந்நாட்டின் வளர்ச்சி மந்தமாகவே இருக்கும் என்பது உறுதியாகியுள்ளது.

Close