பாம்பன் பாலத்தில் மீண்டும் விபத்து.. இளைஞர் பலி!

இராமநாதபுரம், மாவட்டம் பாம்பன் பகுதியை சேர்ந்த வாலிபர் இருசக்கர வாகனத்தில் பாம்பன் பாலத்தில் சென்று கொண்டிருந்தார். இந்த நிலையில் எதிர்பாராதவிதமாக பாலத்தின் மீது நின்றிருந்த கார் மீது இந்த பைக் மோதியது. இதில், பைக்கில் வந்த வாலிபர் சம்பவ இடத்திலியே உயிரிழந்தார்.

தென் மாவட்டங்களில் மிக முக்கிய சுற்றுலா தளமாக பாம்பன் பாலம் இருந்து வருகிறது. முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் அவர்களின் மணிமண்டபம் திறக்கப்பட்டதில் இருந்து அங்கு செல்லும் மக்களின் கூட்டமும் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் பாம்பன் பாலத்தில் ஏற்படும் தொடர் விபத்துகளில் சுற்றுலா பயணிகள் சிக்கிக்கொள்கின்றனர்.

Close