சவூதியில் சட்டவிரோதமாக தங்கி இருப்பவர்களுக்கு எச்சரிக்கை..!

சவூதி அரேபியாவில் சுற்றுலா, உம்ரா விசாவிற்கு வந்துவிட்டு விசா காலம் முடிந்த பிறகும் பலர் மறைமுகமாக அங்கி தங்கி வருகின்றனர். இதுபோன்று லட்சக்கணக்கானோர் அங்கு சட்டவிரோதமாக வசித்து வருகின்றனர். இதையடுத்து இவர்களை கைது செய்து சில நாட்களுக்கு பின்னர் தாய் நாட்டுக்கு தூதரகங்களின் உதவியுடன் வலுக்கட்டாயமாக அனுப்புவதற்கு அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.

அந்த வகையில் சவூதியில் வெளிநாட்டினர் அதிகளவில் தங்கியுள்ள பகுதிகள் குடியிருப்புகளில் போலீசார் சோதனையிட்டு அவர்களின் ஆவணங்களை சோதனையிட்டனர். அப்போது ரியாத்தின் விசா காலம் முடிந்த பிறகு சட்டவிரோதமாக தங்கி இருந்த வெளிநாட்டினரை போலீசார் கைது செய்தனர்.

Close