காலை தொழுகை முடிந்ததும் பகல் தொழுகைக்கு தயாராக வேண்டும் இதற்கிடையே தவறு செய்யும் எண்ணம் வராது- ஏஆர். ரஹ்மான்

தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு ஏஆர். ரஹ்மான் அளித்த நேர்காணலில் அவர் தெரிவிக்கையில்,”நான் சிறுவனாக இருந்தபோது என் தந்தை மரணமடைந்தார். அப்போது என் குடும்பம் மிகவும் கஷ்டப்பட்டது. அப்போதைய ஒரு சூழலில் தற்கொலை செய்துகொள்ளாம் என்று கூட எண்ணினேன். ஆனால் அப்போது என் தாய் மற்றும் எனது சகோதரிகள் எனக்கு ஆறுதலாக இருந்தனர்.” என்றார்.

மேலும் இஸ்லாம் மதத்தை எப்படி உணர்கிறீர்கள்? என்ற கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், அது ஒரு வித உணர்வு அதனை வார்த்தைகளால் கூற முடியாது. என்றார்.

இறைவனை எப்போதெல்லம் நினைக்கிறீர்கள்? என்ற கேள்விக்கு பதிலளிக்கையில் எல்லா நேரங்களிலும் நினைக்கிறேன். என்றார்.

அதெப்படி எந்த தவறும் செய்யாமல் அதேபோல அதில் சிக்காமல் தப்பிக்கிறீர்கள்? என்ற கேள்விக்கு பதிலளிக்கையில், ஐந்து வேளை தொழுகிறவருக்கு அந்த எண்ணம் வராது.

காலையில் தொழுகை முடிந்ததும் பகல் தொழுகைக்கு தயாராக வேண்டும் இதற்கிடையே தவறு செய்யும் எண்ணம் வராது. அதேபோலத்தான் ஒவ்வொரு வேளை தொழுகையையும் நாம் எதிர்பார்த்து காத்திருக்கும்போது தவறு செய்ய மனம் வராது என்றார்.

மேலும் ஒருவர் சிறந்தவராக வாழ முஹம்மது நபி சிறப்பாக வாழ்ந்து காட்டிவிட்டு சென்றுள்ளார். அவரை பின்பற்றினாலே போது அவர் சிறப்பானவராக இருப்பார். என்றார்.

Close