அதிரையில் பெண்களிடம் நடக்கும் பகல் கொள்ளை..!

மிரட்டும் கேஸ் வினியோக ஊழியர்கள்.

வீட்டிற்க்கு சமையல் எரிவாயு பதியப்பட்டால் அந்த ஸ்தாபனத்தின் ஊழியர்களால் வீட்டு முகவரியில் விநியோகம் செய்வது அவர்களின் வேலை.

இப்போது ஒரு சிலிண்டர் கேஸ் விலை 758.50 /- இதைதான் அவர்கள் பெற்றுக் கொள்ள வேண்டும். இதற்கு மாறாக அந்த ஊழியர்கள் அதை ரவுண்ட் கட்டி 800 /- தாருங்கள் என்று வழுக்கட்டாயமாக கேட்கின்றனர்.

விபரமானவர்கள் ரசீதில் இவ்வளவுதானே தொகை உள்ளது, எதற்கு அதிகமாக கேட்கிறீர்கள் என்று கேட்டால் நாங்கள் கொண்டு வருவதற்க்கு கூலி, என்று சொல்லி ஒரு சிலிண்டருக்கு 40 ரூபாய் நிர்ணக்கிறார்கள். பெரும்பாலும் பெண்கள் கேட்கும் தொகையை கொடுத்து விடுகிறார்கள்.

சிலிண்டர் நமது வீடு வரும் வரையிலும் தான் சேர்த்து நம்மிடமிருந்து தொகை வசூலிக்கப் படுகிறது. அவர்கள் கேட்க்கும் தொகை கொடுக்க வில்லையென்றால் உங்க வீட்டு அட்ரஸில் இரண்டு கேஸ் இருக்கு ஒன்றை கேன்சல் செய்யுங்க இனிமேல் இரண்டு வராது ஒன்றுதான் வரும் என்றும், ஒரு சிலிண்டர் உள்ளவர்களிடம் அடுத்த முறை கேஸ் கொண்டு வரமாட்டோம் நீங்கதான் ஆபீஸ் வந்து எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் கேஸ் ஊழியர்களின் மிரட்டலுக்கு பயந்து பெண்கள் கேட்கும் தொகையை கொடுத்து விடுகிறார்கள்.

அதிரையில் சமூக இயக்கங்கள் இருந்தும் இவ்விசயத்தில் ஒரு தீர்வு காணமுடியவில்லை என்பது தான் வேதனையாக உள்ளது.

இப்படிக்கு

LMS அபுபக்கர்.

Close