BREAKING NEWS: விபத்தில் சிக்கிய அதிரை பேருந்து… உயிர் தப்பிய 60 பயணிகள்..! (படங்கள் இணைப்பு)

முத்துப்பேட்டை-அதிரை-பட்டுக்கோட்டை இடையே வந்த பி12 அரசு நகரப்பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இப்போது பட்டுக்கோட்டை பேருந்து நிலையத்தில் பயணிகளை ஏற்றிக்கொண்டு அதிரைக்கு சென்றுகொண்டிருந்தது. கறிக்காடு அருகே பேருந்து செல்லும் போது ப்ரேக் பிடிக்காததால் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த இந்த பேருந்து சாலையொன் நடுவே இருக்கும் தடுப்பில் (Central Median) மோதியது. இதில் பேருந்தின் முன்பக்க கண்ணாடி உடைந்தது. இருப்பினும் பேருந்தில் இருந்த 60 பயணிகளும் உயிர்தப்பினர்.

இந்த விபத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Close