தஞ்சை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை..!

தஞ்சை மாவட்டத்தில் மூன்று நாட்களாக கனமழை கொட்டி வருகிறது. இதையடுத்து தஞ்சை மாவட்டத்தில் பாதுகாப்பு கருதி பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இதேபோல் நெல்லை, கன்னியாகுமரி மாவட்டத்திலும் கனமழை தொடருவதால் அங்கும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தூத்துக்குடி, திருவாரூர் மாவட்டங்களிலும் கனமழை நீடிப்பதால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Close