அதிரையில் கேஸ் விநியோகஸ்தர்கள் பணம் வசூலிப்பதை தடுக்க உங்கள் உதவி தேவை

வீட்டிற்க்கு சமையல் எரிவாயு பதியப்பட்டால் அந்த ஸ்தாபனத்தின் ஊழியர்களால் வீட்டு முகவரியில் விநியோகம் செய்வது அவர்களின் வேலை. இப்போது ஒரு சிலிண்டர் கேஸ் விலை 758.50 /- இதைதான் அவர்கள் பெற்றுக் கொள்ள வேண்டும். இதற்கு மாறாக அந்த ஊழியர்கள் அதை ரவுண்ட் கட்டி 800 /- தாருங்கள் என்று வழுக்கட்டாயமாக கேட்கின்றனர். சிலிண்டர் நமது வீடு வரும் வரையிலும் சேர்த்து நம்மிடமிருந்து தொகை வசூலிக்கப் படுகிறது. அவர்கள் கேட்க்கும் தொகை கொடுக்க வில்லையென்றால் உங்க வீட்டு அட்ரஸில் இரண்டு கேஸ் இருக்கு ஒன்றை கேன்சல் செய்யுங்க இனிமேல் இரண்டு வராது ஒன்றுதான் வரும் என்றும், ஒரு சிலிண்டர் உள்ளவர்களிடம் அடுத்த முறை கேஸ் கொண்டு வரமாட்டோம் நீங்கதான் ஆபீஸ் வந்து எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் கேஸ் ஊழியர்களின் மிரட்டலுக்கு பயந்து பெண்கள் கேட்கும் தொகையை கொடுத்து விடுகிறார்கள்.

இது தொடர்பாக நமது அதிரை பிறையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பாக பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தோம். இந்த நிலையில், இது குறித்து புகாரளிக்க அதிரை SDPI கட்சியினர் கேஸ் ஏஜென்சிக்கு சென்றுள்ளனர். ஆனால், அங்கு வாடிக்கையாளர்களின் எழுத்துப்பூர்வ புகார் கடிதம் இருந்தால் மட்டுமே, நடவடிக்கை எடுக்கப்படும் என நிர்வாகம் தெரிவித்துள்ளது. எனவே, இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் முன்வந்து புகார் கடிதத்தை தங்களிடம் வழங்க வேண்டும் என SDPI கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புக்கு: 9600809828, 9944997036, 9942268351

Close