அதிரையில் நான்கு விதமாக பேசும் நான்கு பேர்… முன்னேற முடியாமல் தவிக்கும் இளைஞர்கள்

நமதூரில் சிலர் இருக்கிறார்கள். அவர்கள் ஒரு நல்ல காரியம் செய்வதற்க்கு யாரும் வர மாட்டார்கள்! ஆனால் அதனை குறை சொல்வதற்க்கும் எள்ளி நகையாடுவதற்க்கு மட்டும் வந்து விடுவார்கள்.  ஒரு தொழிலையோ அல்லது ஒரு நல்ல முயற்சியையோ வெளி நபர் ஒருவர் செய்தால் ஊக்குவித்து பாராட்டும் இவர்கள் நமதூரை சேர்ந்த ஒருவர் அவற்றை செய்தால் குறை சொல்லியே அவர்களின் கதையை முடித்து விடுவார்கள்.

இது போன்று ஊரில் நாலு பேர் நாலு விதமா பேசுவதனால் தான் இளைஞர்களும் தொழில் ஆர்வம் கொண்டவர்களும் அவற்றை ஊரில் மேற்கொள்ளாமல் வெளிநாட்டு வேலைகளுக்காக ஓடுகின்றனர். நண்பன் ஒருவன் ஊரில் தொழில் துவங்க உள்ளேன் என்று சொன்னால் அவர்களை பாராட்டுபவர்களை விட “நீயா என்னத்த கிழிக்கபோற” என்று கேலி கிண்டல் செய்தே அவர்களின் ஆர்வத்தை கெடுத்து விடுகின்றனர். இதே போல் சமூக பணிகளில் ஆர்வத்துடன் ஈடுபட்டு வரும் இளைஞர்களையும் குறைகளை கூறியே பலர் ஒதுக்கி விடுகின்றனர்.

இதனாலேயே அதிரையில் பல திறமைசாலிகள் அடையாளம் தெரியாமல் குடும்பம், வேலை என்ற சிறிய வட்டத்திற்க்குளேயே இருந்து விடுகின்றனர். மனிதர்கள் என்றால் தவறுகள் இருக்கத்தான் செய்யும். அதை சுட்டிக்காட்டி அன்பான முறையில் அவர்களிடம் சொல்லலாம். அனால் சிலர் இந்த குறைகளை ஊரெங்கும் பரப்பி இன்பம் காண்கின்றனர்.

நம்மவர்கள் முன்னேறாமல் போனதற்க்கு நம்மவர்கள் தான் காரணம். நமக்குள் எவ்வளவு சண்டைகள் குழப்பங்கள்! அப்படியிருக்க வெளியில் இருப்பவர்கள் நம்மை பற்றி என்ன நினைப்பார்கள். நாம் என்ன தான் நண்மை செய்தாலும் ஊரில் பொறாமை கொண்ட நான்கு பேர் நான்கு விதமாக சொல்லிக்கொண்டு தான் இருப்பார்கள். அவர்களை ஒரு பொருட்டாக என்னாமல் நல்லவர்கள் கூறும் அறிவுறைகளை ஏற்று நமது பாதையில் நாம் பயணிக்க வேண்டும்.ஒருவர் தான் முன்னேற வேண்டுமென்றால் அவர் தன்னுடைய நட்பு வட்டாரத்தை சரியாக அமைத்துக்கொள்ள வேண்டும்.நண்பர்கள் உறவினர்கள் என்ற போர்வையில் ஒழிந்து கொண்டிருக்கும் நயவஞ்சகர்கள் பலர் நம்மை சுற்றி இருப்பார்கள், அவர்களை இனம் கண்டு ஒதுக்க வேண்டும்.ஒருவரின் நல்ல முயற்சியை ஊக்கமளிக்க வில்லையானாலும் சரி, உதாசீனப்படுத்தாமல் இருப்போம்.இனியாவது நம்மவர்களை முன்னேற விடுவோம்.நாலு பேர் நாலு விதமாக பேசுவதை தவிர்த்து திறமைசாலிகளை வளர விடுவோம்.

ஆக்கம்: நூருல் இப்னு ஜஹபர் அலி

-இது ஒரு மீள் பதிவு

Close