​வெள்ளைப்படுதல் பிரச்சனையை சாதாரணமா எடுத்துக்காதீங்க! இதை சாப்பிடுங்க!!

பெண்களுக்கு வரக்கூடிய பல நோய்களில் வெள்ளைப்படுதலும் ஒன்றாகும். பெண்களின் பிறப்புறுப்பின் வழியே ‘சளி’ போன்ற வெண்ணிறக் கசிவு வெளியேறுவதை வெள்ளைப்படுதல் நோய் (Leucorrhea) என்கிறோம். நுண்ணுயிர்த் தொற்று, சிறுநீர்ப்பாதை நோய்த்தொற்று, கருப்பை வாய்ப்பகுதி வீங்குதல், கருப்பை மற்றும் யோனியில் புண், புற்றுநோய் போன்றவற்றால் வெள்ளைப்படும் நோய் ஏற்படலாம். சில சமயம் அந்தப் பகுதியில் நமைச்சலும் துர்நாற்றமும் ஏற்படும்.

இதை வெள்ளைப்போக்கு, வெட்டை என்று சொல்வார்கள். இதைப் பல பெண்கள் கவனிக்காமலும், வெளியில் சொல்ல வெட்கப்பட்டும் விட்டு விடுவதுண்டு. இதை கவனிக்காமல் விட்டு விட்டால் இனவிருத்தி உறுப்புகளின் ஒரு பகுதியையோ அல்லது பல பகுதியையோ பாதித்து தீவிரமான நோய்களுக்கு அடிப்படையாக மாறி விடும்.
ரத்த சோகையால் அவதிப்படும் பெண்களுக்கும் வெள்ளைப்படுதல் இருக்கும். ரத்த சோகையை சரிசெய்து விட்டால் தானாக நின்றுவிடும்.
இறுக்கமான, குறிப்பாக செயற்கை இழை உள்ளாடைகள் உடுத்துவதாலும் வெள்ளைப்படுதல் ஏற்படும். ‘டீனியா’ என்ற வகை பூஞ்சைக் காளானாலும் வெள்ளைப்படும்.
வெள்ளைப்படுதல் பிரச்சனையானது பெண்களுக்கு கறுவுறுதல் பிரச்சனை உண்டாக காரணமாக அமைகிறது.. மேலும் நாள்ப்பட்ட வெள்ளைப்படுதலை சரி செய்யாமல் விட்டால் அது புற்றுநோயாக மாறவும் வாய்ப்புள்ளது.
1 கட்டு அளவு மணத்தக்காளி இலைகளை எடுத்து அதனுடன் 5 சின்ன வெங்காயம், 5 பூண்டு பல், சிறிதளவு சீரகம் சேர்த்து நீர் விட்டு நன்றாக கொதிக்க வைத்து கொதித்ததும் 1 தேக்கரண்டி மிளகுத்தூள் சிறிது கறிவேப்பிலை, கொத்தமல்லி போட்டு கலந்து மீண்டும் கொதிக்க வைத்து சூப் போல செய்து அடிக்கடி குடித்து வந்தால் பெண்களுக்கு வெள்ளைப்படுதல் குறையும்.
சங்குப்பூ கொடியின் வேரைப் பாலில் நன்றாக அவித்து பிறகு பால் ஊற்றி அரைத்து சிறிது காலை, மாலை பாலில் சாப்பிட்டு வந்தால் வெள்ளைப்படுதல் மற்றும் சிறுநீர் எரிச்சல் ஆகியவை குறையும்.
வெந்தயம் பிஎச் அளவை அதிகரிக்கச் செய்யும். ஒரு ஸ்பூன் வெந்தயத்தைத் தண்ணீர் ஊற்றி இரவு முழுக்க ஊறவைக்க வேண்டும். காலையில் எழுந்ததும் அந்த தண்ணீரை வடிகட்டி, ஒரு ஸ்பூன் தேன் கலந்து, வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.
தினமும் ஒன்று அல்லது இரண்டு வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால், அதிக அளவிலான வெள்ளைப்படுதல் சரியாகும். ஜீரணக் கோளாறுகளும் உங்களை நெருங்கவே முடியாது.
ஒரு ஸ்பூன் இஞ்சிப் பொடியை இரண்டு டம்ளர் தண்ணீரில் போட்டு, கொதிக்க வேண்டும். அது ஒரு டம்ளராக குறையும் வரை கொதிக்க விட்டு, பின்னர் வடிகட்டி குடித்தால், வெள்ளைப்படுதல் பிரச்னையை மிக விரைவாகத் தீர்க்க முடியும்.
பத்து கெய்யா இலைகளை எடுத்து தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைக்க வேண்டும். 10 முதல் 15 நிமிடங்கள் வரை நன்கு கொதித்தபின் வடிகட்டி, குளிர வைக்கவும். அந்த தண்ணீரைக் கொண்டு, பிறப்புறுப்பைக் கழுவினாலும் வெள்ளைப்படுதல் குறையும்.

 

Close