பேஸ்புக்கில் வீடியோ வெளியிட்ட இஸ்லாமியர் கைது… சென்னையில் காவல்நிலையம் முற்றுகை!

சென்னை புதுப்பேட்டையில் உள்ள தலித் மற்றும் இஸ்லாமிய மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் இரண்டு பெண்கள் ஆதார் சரிபார்ப்பதற்காக வந்ததாக கூறி பாமர பெண்களிடம் ஆதார் அட்டைகளை வாங்கிக்கொண்டிருந்தனர். அப்போது இதனை கவனித்த ஜெம்சித் என்ற நபர் அவர்களிடம் விசாரித்ததில் இரண்டு பெண்களும் திருட்டுத்தனமாக பாஜக வுக்கு ஆள் சேர்ப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை வீடியோ எடுத்து அவர் பேஸ்புக்கில் வெளியிட அது வைரலாக பரவியது.

இந்த நிலையில் எழும்பூர் போலீசார் வீடியோவை வெளியிட்ட இளைஞரை கைது செய்தனர். இதையடுத்து இன்று மாலை 4:30 மணிக்கு காவல்துறையினரை கண்டித்து TNTJ சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

Close