மல்லிப்பட்டினத்தில் முழுவீச்சில் நடைபெற்று வரும் துறைமுக விரிவாக்க பணிகள் (படங்கள் இணைப்பு)

தஞ்சை மாவட்டம், மல்லிப்பட்டினத்தில் பழைய துறைமுகம் பயன்பாட்டில் உள்ளது. ஆனால் இங்கு போதிய வசதிகள் இல்லை. நெருக்கடியாக இருப்பதால் நவீன முறையில் புதிய துறைமுகம் அமைத்துத் தர வேண்டும் என இப்பகுதி மீனவர்கள், மீனவ சங்கத்தினர் அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர். இந்தக் கோரிக்கையை ஏற்ற தமிழக அரசு கடந்த 2014 – 2015 ஆண்டு நிதிநிலை அறிக்கையில் மல்லிப்பட்டினத்தில் துறைமுக மேம்பாட்டுப் பணி மேற்கொள்ளப்படும் என அறிவித்தது. இவர்களின் கோரிக்கையை ஏற்ற தமிழக அரசு ரூ. 66 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது. இதையடுத்து துறைமுக விரிவாக்கப் பணிகளுக்காக இடம் கையகப்படுத்தப்பட்டது. இதையடுத்து, கடந்த சில நாள்களாக துறைமுக விரிவாக்கப்பணிகள் நடைபெற்று வருகின்றன.

செய்தி மற்றும் படங்கள்: முஹம்மது ரசீன் (மாணவ பத்திரிக்கையாளர்)
Close