“பாஸ்போர்ட்” பறவைகளின் சரணாலயம் – அதிரை கவியன்பன் கலாம்

வாசற் கதவைத் தட்டி

வாய்ப்புகளைக் கொட்டி

நேசமுடன் வரவழைத்த நாடு

நிதம்நிதம் அமீரகப் புகழ் பாடு!

வறுமை இருளை நீக்கிட

வந்தாரை வாழ வைத்துத்

திறமைகளை ஊக்குவிக்கத்

திக்கெட்டும் வாழ்கின்ற

“பாஸ்போர்ட்” பறவைகளின் சரணாலயம்;

பாலைவனத்தையே செழிப்பான

சோலைவனமாக்கிய ஆச்சர்யம்!

வானுயர்ந்த கட்டிடங்கள்

வடிவமைத்த உழைப்புகள்

மானுட சக்தியை

மதிக்கின்ற அழைப்புகள்

வழிபாட்டு உரிமைகள்

விழிபார்த்து வியக்கும்

அன்னை நாட்டின் பொருளாதாரம்

அதிகம் பலம்பெறவே

அன்னிய நாடாயினும்

அரவணத்த அமீரகமே!

-அதிரை கவியன்பன் கலாம், துபை

Close