மோடியுடன் சந்திப்பு

தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை ஒபாமா வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினார். அதிபர் பதவியில் இருந்து ஒபாமா ஓய்வு பெற்ற பிறகு, இருவரும் சந்திப்பது இதுவே முதல்முறையாகும்.

இதுகுறித்து குறித்து பிரதமர் மோடி சுட்டுரையில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவில், 'அமெரிக்க அதிபர் ஒபாமாவுடனான சந்திப்பு, மகிழ்ச்சிகரமான தருணமாக இருந்தது. அவரது தலைமையில் இயங்கும் அறக்கட்டளையால் மேற்கொள்ளப்பட்டு வரும் புதிய முயற்சிகள் குறித்தும், இந்தியா-அமெரிக்கா இடையிலான உறவை மேலும் வலுப்படுத்துவது குறித்த அவரது கண்ணோட்டங்களையும் அறிந்துகொண்டேன்' என்று தெரிவித்துள்ளார்

பதவியில் இருக்கும்போது, இருமுறை இந்தியாவுக்கு வந்த அமெரிக்க அதிபர் ஒபாமா ஆவார். அத்துடன், இந்திய குடியரசு தின விழாவில் பங்கேற்ற முதல் அமெரிக்க அதிபரும் அவர்தான்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்!

' />

இந்திய முஸ்லிம்களை பாதுகாக்க வேண்டும்-ஒபாமா வேண்டுகோள்

இந்தியாவிலுள்ள முஸ்லிம்கள், தங்களை இந்தியர்களாகவே கருதுகின்றனர்; எனவே, இந்தியா, தனது முஸ்லிம் மக்களை பேணிப் பாதுகாக்க வேண்டும்’ என்று அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா தெரிவித்தார்.

தில்லியில் தனியார் செய்தி நிறுவனம் ஒன்றின் சார்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தலைமைத்துவம் தொடர்பான மாநாட்டில் ஒபாமா பங்கேற்று, உரையாற்றினார். அப்போது, பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோருடனான தனது உறவு, பயங்கரவாதம், பாகிஸ்தான், ஒசாமா பின் லேடனுக்கு எதிரான அமெரிக்காவின் நடவடிக்கை உள்ளிட்டவை குறித்து பேசினார். பின்னர், கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவரிடம், பல்வேறு கேள்விகள் முன்வைக்கப்பட்டன.

அப்போது, இந்தியா குறித்த ஒரு கேள்விக்கு பதிலளித்து, அவர் கூறியதாவது:

இந்தியாவில் உள்ள முஸ்லிம் சமூகம் மிகப் பெரியதும் ஒன்றுபட்டதுமாகும். இங்குள்ள முஸ்லிம்கள், தங்களை இந்தியர்களாகவே கருதுகின்றனர். வேறு சில நாடுகளில் இதே நிலை இருப்பதில்லை என்பது துரதிருஷ்டவசமானதாகும். எனவே, இந்தியா தனது முஸ்லிம் மக்களை பேணிப் பாதுகாக்க வேண்டிய அவசியம் உள்ளதாக கருதுகிறேன் என்றார் ஒபாமா.

மேலும், கடந்த 2015, ஜனவரி மாதம் தாம் இந்தியா வந்திருந்தபோது, ‘மத சகிப்புத் தன்மையும், ஒவ்வொருவரும் தங்கள் மதத்தை கடைபிடிப்பதற்கு உள்ள உரிமையும் உறுதி செய்யப்பட வேண்டியது அவசியம்’ என்று பிரதமர் மோடியுடனான தனிப்பட்ட பேச்சுவார்த்தையின்போது வலியுறுத்தியிருந்ததாக ஒபாமா தெரிவித்தார். அதற்கு மோடியின் எதிர்வினை என்னவாக இருந்தது என்பது குறித்து, அவரிடம் கேள்வியெழுப்பப்பட்டது. ஆனால், அந்த விவரங்களை பகிர்ந்து கொள்ள முடியாது என்று ஒபாமா தெரிவித்துவிட்டார்.

ஆனால், பிரதமர் மோடி குறித்த வேறொரு கேள்விக்கு பதிலளித்த ஒபாமா, ‘இந்தியாவில் ஒற்றுமைக்கான முக்கியத்துவத்தை உறுதி செய்வதே அவரது நோக்கமாக உள்ளது; இந்த நாட்டுக்கான தொலைநோக்குப் பார்வையை அவர் கொண்டுள்ளார்’ என்றார். இதேபோல, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குடனான தனது நட்பை நினைவுகூர்ந்த ஒபாமா, கடந்த 2008-ஆம் ஆண்டில் உலக பொருளாதார மந்த நிலையின்போது மன்மோகன் மேற்கொண்ட நடவடிக்கைகள் சிறப்பானவை எனப் பாராட்டினார்.

இருவருக்கும் (மோடி, மன்மோகன்) இடையே உள்ள ஒற்றுமை, இந்தியா – அமெரிக்கா நல்லுறவை வலுப்படுத்துவதற்கு அவர்கள் அளித்த முக்கியத்துவமே என்றார் ஒபாமா. இதேபோல இந்திய உணவுகள் மீதுள்ள தனது விருப்பத்தையும் அவர் குறிப்பிட்டுப் பேசினார்.

டிரம்ப் மீது சாடல்: இதனிடையே, தற்போதைய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் பெயரை நேரடியாக குறிப்பிடாமல் அவரை ஒபாமா விமர்சித்தார்.

சுட்டுரையில் கருத்துகள் தெரிவிக்கும்போது நன்றாக யோசித்து பதிவிட வேண்டும்; அக்கருத்துகளால் ஏற்படும் தாக்கங்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று ஒபாமா கூறினார். சுட்டுரையில் அவ்வப்போது அதிரடியான, சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டு வரும் டொனால்டு டிரம்ப் மீதான விமர்சனமாகவே ஒபாமா இவ்வாறு கூறியுள்ளார். இதேபோல, பாரீஸ் பருவ நிலை ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகுவதாக டிரம்ப் மேற்கொண்ட முடிவையும் ஒபாமா விமர்சித்தார்.

மோடியுடன் சந்திப்பு

தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை ஒபாமா வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினார். அதிபர் பதவியில் இருந்து ஒபாமா ஓய்வு பெற்ற பிறகு, இருவரும் சந்திப்பது இதுவே முதல்முறையாகும்.

இதுகுறித்து குறித்து பிரதமர் மோடி சுட்டுரையில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘அமெரிக்க அதிபர் ஒபாமாவுடனான சந்திப்பு, மகிழ்ச்சிகரமான தருணமாக இருந்தது. அவரது தலைமையில் இயங்கும் அறக்கட்டளையால் மேற்கொள்ளப்பட்டு வரும் புதிய முயற்சிகள் குறித்தும், இந்தியா-அமெரிக்கா இடையிலான உறவை மேலும் வலுப்படுத்துவது குறித்த அவரது கண்ணோட்டங்களையும் அறிந்துகொண்டேன்’ என்று தெரிவித்துள்ளார்

பதவியில் இருக்கும்போது, இருமுறை இந்தியாவுக்கு வந்த அமெரிக்க அதிபர் ஒபாமா ஆவார். அத்துடன், இந்திய குடியரசு தின விழாவில் பங்கேற்ற முதல் அமெரிக்க அதிபரும் அவர்தான்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்!

Close