அதிரை APL கிரிக்கெட் தொடர்-அரை இறுதிக்கு முன்னேறியது போலிஸ் அணி!

அதிரை ஃப்ரெண்ட்ஸ் கிரிக்கெட் கிளப் (AFCC)  நடத்தும் பத்தாம் ஆண்டு மாவட்ட அளவிலான கிரிக்கெட் தொடர் போட்டி  நமதூர் ஷிபா மருத்துவமனை எதிரில் உள்ள கிரானி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. கிரிக்கெட் பந்தில் நடைபெறும் இத்தொடரில் அதிரை அணிகள் உட்பட மாவட்ட அளவிலான தலைசிறந்த கிரிக்கெட் அணிகள் விளையாடி வருகின்றன.11ம் நாளான இன்று மதுக்கூர் அணியை எதிர்த்து போலிஸ் அணி விளையாடியது. இதில் போலிஸ் அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் போலிஸ் அணி வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறியது.

நாளைய தினம் முதல் அரை இறுதி போட்டி தஞ்சை ஸ்ரீ கணேஷ் அணியை எதிர்த்து RVMCC தஞ்சை அணி விளையாட உள்ளது. இரண்டாவது அரை இறுதி போட்டியில் அதிரை AFCC அணியை எதிர்த்து போலிஸ் அணி விளையாட உள்ளது.

அதிரை APL கிரிக்கெட் தொடர் குறித்த தினசரி பதிவுகளுக்கு இணைந்திருங்கள் அதிரை பிறையுடன்.

Advertisement

Close