அதிரையில் ரோட்டரி சங்கம் நடத்திய கண் சிகிச்சை முகாமில் 23 பேர் இலவச அறுவை சிகிச்சைக்கு தேர்வு

02/12/2017 சனிக்கிழமை அன்று அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கம் மற்றும் கோவை சங்கரா கண் மருத்துவமனையும் இணைந்து நடத்திய மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம், அதிராம்பட்டினம் அரசினர் பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் நடைப்பெற்றது.

இம்முகாமை சங்கத்தின் தலைவர் Rtn.ஆறுமுகம்,செயளாலர் Rtn.முகமது நவாஸ் கான், பொருளாளர் Rtn.அகமது மன்சூர் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதில் 100 க்கும் மேற்ப்பட்ட பொது மக்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். கலந்து கொண்டவர்களில் 23 பேருக்கு மருத்துவர்கள் இலவச கண் அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் இன்றே கோவைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

இம்முகாமில் ரோட்டரி சங்க மாவட்ட நிர்வாகிகள் வைரவன், வெங்கடேஸ், உதயகுமார் மற்றும் உறுப்பினர்கள் M.சாகுல் ஹமீது, M.மன்சூர், Epms.நவாஸ்,B.முகமது ஹலீம், அய்யாவு உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Close