அதிரை மஜக நிர்வாகிகளுடன் பொதுசெயலாளர் தமீமுன் அன்சாரி சந்திப்பு

ஆண்டுதோறும் டிசம்பர் 06 அன்று தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதியில் பல்வேறு இஸ்லாமிய கட்சிகளாலும், அமைப்புகளாலும் பாபர் மசூதி மீட்பு போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு தஞ்சை தெற்கு மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் அதிரை தபால் நிலைய முற்றுகை போராட்டம் நடத்தப்பட உள்ளது. இதையடுத்து அதிரை வந்த மஜக பொதுசெயலாளர் தமீமுன் அன்சாரி அதிரை நிர்வாகிகளை பேருந்து நிலையம் அருகே நேரில் சந்தித்து போராட்டம் குறித்து கேட்டறிந்து ஆலோசனைகளை வழங்கினார்.

இதையடுத்து பொதுமக்களும், கட்சி நிர்வாகிகளும் தமீமுன் அன்சாரிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர்.

Close