அதிரை அஹமது ஹாஜா தலைமையில் தஞ்சையில் தமுமுக நடத்தும் டிசம்பர் 6 கண்டன ஆர்ப்பாட்டம்

ஆண்டுதோறும் டிசம்பர் 06 அன்று தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதியில் பல்வேறு இஸ்லாமிய கட்சிகளாலும், அமைப்புகளாலும் பாபர் மசூதி மீட்பு போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு தஞ்சை ரயிலடியில் காலை 10 மணிக்கு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பாக டிசம்பர் 06 கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளது.

தஞ்சை தெற்கு மாவட்ட தமுமுக தலைவர் அதிரை அஹமது ஹாஜா தலைமையில் நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கருஞ்சட்டை அணிந்து பாபர் மசூதியை மீட்கக்கோரி முழக்கமிட உள்ளனர்.

Close