அதிரையில் நடைபெற்ற அதிமுக அம்மா அணி ஆலோசனைக்கூட்டம் (படங்கள் இணைப்பு)

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவு தினம் வரும் 5 ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி அதிரை அதிமுக அம்மா அணி சார்பாக தஞ்சை தெற்கு மாவட்டம் அதிரை நகரம் சார்பாக இன்று மாலை 5 மணிக்கு அந்த கட்சி அலுவலகத்தில் அதிரை நகர அவைத்தலைவர் ஹபீப் முஹம்மது தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதில் தஞ்சை தெற்கு மாவட்ட சிறுபாண்மை நலப்பிரிவு துணை தலைவர் எம்.பி.அபூபக்கர், கழக செயலாளர் ஜமால் முஹம்மது, அம்மா பேரவை செயலார் முஹம்மது, கழக துணை செயலாளர் அய்யாவுஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இக்கூட்டத்தில் வரும் 5 ஆம் தேதி காலை 9 மணிக்கு வண்டிப்பேட்டையில் உள்ள கட்சி தலைமையகத்தில் நடைபெறும் நினைவேந்தல் நிகழ்ச்சியில் அனைவரும் கலந்துகொள்ளவேண்டும் என தீர்மாணம் நிறைவேற்றப்பட்டது.

Close