அதிரையில் ஜெயலலிதாவின் நினைவு தினத்தை ஒட்டி அதிமுக வினர் அமைதிப்பேரணி (படங்கள் இணைப்பு)

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவால் கடந்த ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி மறைந்தார். அவர் மறைந்து இன்றுடன் ஓராண்டு நிறைவுபெறுகிறது. இதையடுத்து அதிரையில் அதிமுகவினர் கருப்புசட்டை அணிந்து பேரணி சென்று பேருந்து நிலையம் அருகே வைக்கப்பட்டிருந்த அவரது படத்திற்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினர். அதிமுக நகர செயலாளர் பிச்சை தலைமை நடைபெற்ற இந்த பேரணியில் துணை செயலாளர் அஹமது தமீம் மற்றும் அதிமுக தொண்டர்கள் கலந்துகொண்டனர்.

Close