விஷ ஜந்துக்களின் கூடாரமான அதிரை செய்னா குளம்… முட்புதற்கள் வெட்டும் பணி தீவிரம் (படங்கள் இணைப்பு)

அதிரை காதிர் முஹைதீன் கல்லூரி பின் புறம் கீழத்தெருவில் அமைந்துள்ளது செய்னா குளம். சாக்கடை குளமாக இருந்த இந்த குளம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் தூர்வாரப்பட்டு சுற்றிலும் வேலி அமைக்கப்பட்டது. இதற்காக 50 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டாலும் 50 சதவீத வேலைகள் கிடப்பில் போடப்பட்டு சரி வர முடிக்கப்படாமல் நிறுத்தப்பட்டது.

இந்த அலெட்சிய போக்கால் குளத்தை சுற்றிலும் கருவேலமரம் வளர்ந்து காடாக மாறியது. இதனால் அப்பகுதியில் விஷ ஜந்துக்களின் தொல்லை அதிகமாக காணப்பட்டது. இது குறித்து அப்பகுதி மக்களும் முன்னாள் 15வது வார்டு கவுன்சிலர் அப்துல் லத்தீப் அவர்களும் இது குறித்து பேரூராட்சியில் புகார் அளித்து வந்தனர். அதன் அடிப்படையில் பேரூராட்சி துப்புரவு தொழிலாளர்கள் மூலம் முட்புதற்களை அகற்றும் பணி கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது.

Close