திருக்குர்ஆன் கூறிய வலியில்லா பிரசவ முறை… பின்பற்றும் மேலை நாடுகள்!

ஒரு மனிதன் சாதாரணமாக தன் வாழ்வில் 45 டெல் வலியை உணர்கிறான். ஆனால் ஒரு குழந்தையை பெற்றெடுக்க ஒரு தாய் சாதாரணமாக 57 டெல் மேல் வரை வலியை உணர்கிறாள் என்கிறது அறிவியல். பிரசவத்தின் போது தாங்கமுடியாத வலியை ஒரு தாய் அனுபவிக்கிறாள்.

அந்த வலியை குறைவாக உணர்வதற்காக நவீன விஞ்ஞானம் நீருக்குள் பிரசவம் செய்வதை பரிந்துரை செய்துள்ளது. கிட்டத்தட்ட 70 நாடுகளில் இவை இன்றும் நடைமுறையில் உள்ளது. மேலை நாடுகளில் மகப்பேறு மருத்துவமனைகளில் பிரசவ அறையில் பெரிய தண்ணீர் தொட்டி அமைத்து அதில் நிறைமாத கர்ப்பிணியை பிரசவ நேரத்தில் அந்த தண்ணீர்தொட்டியில் அமர வைத்து விடுகின்றனர். குழந்தை கருப்பையில் நீருக்குள் மிதந்தபடி தான் உள்ளது. எனவே நீருக்குள் பிரசவம் நடைபெறும் போது குழந்தை தனக்கு பழக்கப்பட்ட நிலையிலேயே வெளியே வருகிறது. எனவே குழந்தைக்கும் இது இயல்பானதாக உள்ளது. தாயும் சிரமமின்றி பிரசவிக்கிறாள்.

தண்ணீர்த் தொட்டியில் பிரசவம்!

இந்த நீருக்குள் பிரசவம் செய்வதை இன்று அறிவியல் விஞ்ஞானம் நடைமுறைப் படுத்தியதை கிட்டத்தட்ட 2000 ஆண்டுகளுக்கு முன்னரே நடத்தி காட்டியதாக திருக்குர்ஆன் கூறுகிறது.

மர்யம் (அலை) என்ற பெண்மணி பிரசவ வலி வந்தது பற்றியும், அப்பிரசவ வலியை குறைக்க இறைவன் ஒரு நீர் ஊற்றை உருவாக்கி வலியை குறைத்தாகவும் கீழ் காணும் உலக மக்களின் நேர்வழிக்காட்டியான திருக்குர்ஆன் கூறுகிறது.

திருக்குர்ஆன் வசனம்:

பிரசவ வலி அவரை ஒரு பேரீச்சை மரத்தின் அடிப்பாகத்திற்குக் கொண்டு சென்றது. “நான் இதற்கு முன்பே இறந்து, அடியோடு மறக்கடிக்கப்பட்டவளாக இருந்திருக்கக் கூடாதா?” என்று அவர் கூறினார்.”கவலைப்படாதீர்! உமது இறைவன் உமக்குக் கீழே ஊற்றை ஏற்படுத்தியுள்ளான்” என்று அவரது கீழ்ப்புறத்திலிருந்து வானவர் அழைத்தார்.

திருக்குர்ஆன்-19: 23, 24

மர்யம் (அலை) வலியை உணர்ந்த போது ஜிப்ரில் (நீர்) ஊற்றை இறைவன் ஏற்படுத்தியுள்ளதாகவும் கவலை வேண்டாம் எனவும் அறிவுரை கூறுகிறார்.

நீருக்குள் பிரசவம் 19:23,24 வசனத்தில் நீருக்குள் நடக்கும் பிரசவத்தால் வலி இருக்காது என்ற கருத்து கூறப்படுகிறது. இன்றைய அறிவியல் உலகம் இப்போது இதைக் கண்டு பிடித்துள்ளது. இந்த நடைமுறை சாத்தியம் என விஞ்ஞானம் நிருபித்துள்ளது.

Close