அதிரையில் எழுச்சியுடன் நடைபெற்ற மஜக வின் பாபர் மசூதி ஆர்ப்பாட்டம் (படங்கள், வீடியோ இணைப்பு)

அதிரை பிறை பேஸ்புக் பக்கத்தில் செய்யப்பட்ட லைவ் விடியோவை காண:

மஜக வின் டிசம்பர் 6 அதிரையில் ஆர்ப்பாட்டம்

Publié par அதிரை பிறை sur mardi 5 décembre 2017

அதிராம்பட்டினம், டிசெம்பர் 06: கடந்த 1992 ஆம் ஆண்டு டிசெம்பர் 06 அன்று உலக முஸ்லிம்களுக்கு கருப்பு நாளாக அமைந்தது. காரணம், அயோத்தியில் 400 ஆண்டுகாலம் பழமையான பாபர் மசூதியினை சங்க்பரிவார் அமைப்புகளின் வழிகாட்டுதலின் படி இடிக்கப்பட்டது. இந்த சம்பவம் நடைபெற்று 23 ஆண்டுகள் உருண்டோடி விட்டன. ஆனால் இன்னும் பாதிக்கப்பட்ட இஸ்லாமியர்களுக்கு பாபர் மசூதி கிடைக்கவில்லை.

எனவே பாபர் மசூதியை மீட்டெடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அதிரையில் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காலை 10:30 மணியளவில் தக்வா பள்ளி அருகாமையிலிருந்து பேரணியில் ஈடுபட்ட மஜக வினர் மற்றும் இஸ்லாமியர்கள் பேருந்து நிலையம் சென்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மஜக மாநில துணை பொதுசெயலாளர் மதுக்கூர் ராவுத்தர்ஷா கலந்துகொண்டு கண்ட உரையாற்றினார். இதில் மஜக குவைத் மண்டல துணைச் செயலாளர் பைசல் அஹமது, அதிரை நகர தலைவர் அதிரை செல்லா ராஜா மற்றும் நகர நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

Close