பட்டுக்கோட்டையில் உணர்ச்சி பொங்க நடைபெற்ற SDPI பாபர் மசூதி மீட்பு போராட்டம்

ஆண்டுதோறும் டிசம்பர் 06 அன்று தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதியில் பல்வேறு இஸ்லாமிய கட்சிகளாலும், அமைப்புகளாலும் பாபர் மசூதி மீட்பு போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு பட்டுக்கோட்டை தலைமை தபால் நிலையம் அருகே காலை 11 மணிக்கு SDPI சார்பாக டிசம்பர் 06 கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

தஞ்சை தெற்கு மாவட்ட SDPI தலைவர் அதிரை முஹம்மது இலியாஸ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பாபர் மசூதியை மீட்கக்கோரி முழக்கமிட்டனர்.

Close