தஞ்சையை தடுமாற வைத்த தமுமுக வின் பாபர் மசூதி மீட்பு போராட்டம் (படங்கள் இணைப்பு)

ஆண்டுதோறும் டிசம்பர் 06 அன்று தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதியில் பல்வேறு இஸ்லாமிய கட்சிகளாலும், அமைப்புகளாலும் பாபர் மசூதி மீட்பு போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு தஞ்சை ரயிலடியில் காலை 10 மணிக்கு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பாக டிசம்பர் 06 கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

தஞ்சை தெற்கு மாவட்ட தமுமுக தலைவர் அதிரை அஹமது ஹாஜா தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கருஞ்சட்டை அணிந்து பாபர் மசூதியை மீட்கக்கோரி ஆயிரக்கணக்கான ஆண்கள், பெண்கள், குழந்தைகள் கலந்துகொண்டு முழக்கமிட்டனர்.

Close