அதிரை காலியார் தெரு குடிநீர் குழாய் உடைப்பை சீர்படுத்திய பேரூராட்சி ஊழியர்கள்

காலியார் தெருவில் குடிநீர் குழாய் உடைந்து வெளியேறி கொண்டு இருந்தது அதனை சரி செய்ய கோரி காலியார் தெரு இளைஞர்களும் காலியார் தெரு வாசிகளும் அதிரை பேரூராட்சியில் புகார் செய்தனர். அதனை கண்டு கொள்ளாத போரூராட்சி அதனை சரி செய்ய ஆட்கள் அனுப்புதாக கூறி அனுப்பவில்லை. அதனால் காலியார் தெரு இளைஞர்கள் இதனை அதிரை ஊடகங்களிடம் தெரிவித்ததை அடுத்து அவற்றில் பதிவுகள் வெளியிடப்பட்டன. இதன் விளைவாக அதிரை பேரூராட்சி ஊழியர்கள் இன்று இந்த பிரச்சனையை சீர்செய்தனர்.

Close