BREAKING NEWS: மஸ்ஜிதுல் அக்ஸாவை கொண்ட ஜெருசலம் இஸ்ரேல் தலைநகராக அறிவிப்பு

இஸ்லாமியர்கள், கிருஸ்தவர்கள் மற்றும் யூதர்களின் புனித தலமாக ஜெருசலம் உள்ளது. 1967-ல் நடந்த மத்திய கிழக்கு போரின் போது இந்த நகரை கைப்பற்றிய இஸ்ரேல் 1980-ம் ஆண்டில் இருந்து அதை நிர்வகித்து வருகிறது. சர்வதேச சட்ட திட்டங்களின்படி பலஸ்தீனத்திடம் ஆக்கிரமிக்கப்பட்ட ஒரு நகரமாக ஜெருசலம் கருதப்பட்டு வருகிறது. இந்நிலையில், இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேத்தை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்துள்ளார். இதற்கு மத்திய கிழக்கு நாடுகள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளன. முன்னதாக டிரம்பின் இந்த அறிவிப்பு தொடர்பாக கருத்து வெளியிட்ட பாலத்தீன தலைவர் மெஹமுத் அப்பாஸின் செய்தி தொடர்பாளர், ”இது ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும்” என்று எச்சரித்துள்ளார்.

Close