புறக்கணிக்கப்படுகிறதா அதிரை CMP லைன் ! (படங்கள்)

அதிரை CMP லைன் சாலையில் பேரூராட்சியால் கடந்த சில மாதங்களுக்கு முன்னால் கழிவுநீர் வெளியேறுவதற்காக குழாய் அமைக்கபட்டது.

குழாய் சரியான வாட்டத்தில் அமைக்கபடாமையினால் 2 வாரங்களாக கழிவுநீர் சாலையில் வழிந்தோடுகின்றது. இதனால் அப்பகுதியில் நோய் பரவ அதிகளவில் வாய்ப்புகள் உள்ளது. கழிவுநீர் குழாய் சீர் அமைத்து தர சம்பந்தபட்டவர்களிடம் வாய் வழி புகார் அளித்துள்ளனர் அப்பகுதி மக்கள்.

இது வரை இதற்காக நடவடிக்கையும் ஏதும் எடுக்கபடாத நிலையில் அழைக்கப்படுத்துவதாகவும் புகார்கள் எழுந்துள்ளது.

பள்ளிவாசல் செல்லும் வழியில் கழிவுநீர் ஓடுவதால் தொழுகைக்கு செல்பவர்களுக்கு மிகுந்த சிரமம் அளிப்பதாகவும். கழிவுநீர் குழாயை சீர் அமைத்து தராவிட்டால் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தவும் தயாராக இருக்கின்றனர் அப்பகுதி மக்கள்.

இது தொடர்பாக பேரூர் நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்துதருமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Close