கண்டுகொள்ளாமல் விடப்பட்ட கடற்கரைத்தெரு..!(வீடியோ இணைப்பு)

அதிரை கடற்கரைத்தெருவில் கடந்த பல மாதங்களாக சாக்கடை பிரச்சனை இருந்து வருகிறது. தெருவின் நுழைவு வாயிலாக கருதப்படும் இப்பகுதியில் தொடரும் இப்பிரச்சனை காரணமாக அவ்வழியாக பெண்கள் மதர்ஷா செல்லும் மாணவிகளும், தொழுகையாளிகளும், பள்ளி குழந்தைகளும் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். இதனை அடுத்து யாரையும் எதிர்பார்காமல் அப்பகுதி மக்களிடம் நிதி வசூல் செய்து சுகாதார பணிகளை முஹல்லாவாசிகள் செய்து வருகின்றனர். இது தொடர்பாக நமது அதிரை பிறையில் தொடர்ந்து பல பதிவுகளை வெளியிட்டு வருகிறோம்.. ஆனால் இதற்கு பேரூராட்சி தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது. இதுகுறித்து முதலமைச்சர், மாவட்ட ஆட்சியருக்கு புகார் அளிக்க உள்ளதாக கூறியுள்ள தெருவாசிகள், விரைவில் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Close