பெரிய விளைவுகளை ஏற்படுத்தும் பேஸ்புக் #Tag_that_Friend கலாச்சாரம்

Tag that friend என்ற கலாச்சாரம் சின்ன சின்ன நகைச்சுவையில் ஆரம்பித்து தற்போது எப்படி நிற்கிறது என்றால்!

கறுப்பாக இருக்கும் பெண்/ஆண்,உடல் பருமனான ஆண்/பெண்ணின் படத்தினை போட்டு இவரின் ஜோடிகளை tag செய்யவும் என்று போடுகிறார்கள். அதுபோல் இந்த இந்த மாதங்களில் பிறந்த ஆண்/பெண்களுக்கு இந்த இந்த பெண்கள்/ஆண்கள் என அழகு அழகுஇல்லாத ஆண்/பெண் போட்டோக்களை போட்டு tag that friend என்று போடுகிறார்கள். இந்த மாதங்களொல் பிறந்தவர்கள் அழகு, இந்த நாட்களில் பிறந்தவர்கள் அறிவாளிகள் என்று டேக் செய்யப்படுகிறது. (இது ஒரு வகையான ஜோதிடம் போன்றனது)

இதற்கும் பல பேர் தங்களின் நண்பர்களை tag செய்து கிண்டல் செய்கின்றனர்!

கொஞ்சமாவது சிந்தித்தது உண்டா?

அந்த படத்தில் இருப்பவர் போல் நீங்களோ அல்லது உங்கள் வீட்டில் இருப்பவரோ இருந்தால் உங்கள் மனநிலை என்னவாக இருக்கும்? அழகு என்பது உடலில் இல்லை, மாறாக உள்ளத்திலேயே உள்ளது.

நம் செய்யும் விளையாட்டு தனமான குறும்புகள் மற்றவர்களை வருத்தப்பட வைக்க கூடாது. இப்படி ஒரு பக்கம் இருக்க இன்னோர் பக்கம் tag that playboy பொண்ணுங்கள ஈஸியா கரெக்ட் பண்ணிடுவான், tag that body builder உடல காட்டி மயக்கிடுவான், Tag அவன் பொண்ணுங்கள இப்படி மயக்கிடுவான். இப்படி அடிக்கி கொண்டே போகலாம் இந்த அசிங்கங்களை.

இது போன்ற பதிவுகளில் பெண்கள் தன் ஆண் நண்பர்களை tag செய்து விளையாடி வருகின்றனர். இதெல்லாம் ஒரு fun boss! என்று சொல்லுரிங்களா? இதெல்லாம் பெண்களை எதோ பொருள் போல் நினைத்து உண்மையில் ஏமாற்று வேளைகளில் ஈடுபடும் நபர்களுக்கு ஊக்கமாக அமையும்

பெண்களை ஏமாற்றுவது குற்றமல்ல அது பேஷன் என்று சாதாரணமான நிகழ்வாக பார்க்கப்படும் இதன் விளைவாக. தயவு விளையாட்டாக இது போன்ற பதிவுகளை வெளியிட்டு பாவத்தில் சிக்கிக்கொள்ள வேண்டாம்.

ஆக்கம்: அப்துல்லாஹ்

Close