புதுச்சேரியில் பதற்றம்… பள்ளிவாசலை சூரையாடிய காவி பயங்கரவாதிகள்

புதுச்சேரி ஆம்பூர் சாலையில் உள்ள முவஹிதியா பள்ளிவாசல் நேற்று (07.12.2017) இரவு ஃபாஸிசவாதிகளால் சேதப்படுத்தப்பட்டுள்ளது. பள்ளிவாசல் கண்ணாடிகள் உடைக்கப்பட்டு உள்ளே இருந்த முக்கிய பொருட்கள், குர்ஆன்கள், கிதாபுகள் கிழிக்கப்பட்டு கிடந்தன. கடந்த டிசம்பர் 06 அன்று இந்து அமைப்புகள் சார்பில் புதுச்சேரியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய தலைவர்கள் முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்பு பிரச்சாரத்தையும், சிந்தனையையும் தூண்டியதன் விளைவு தான் இந்த சம்பவம். அன்றைய தினம் நாட்டுவெடிகுண்டு வைத்திருந்த பாஸ்கரன், சூர்யா. அன்புசெல்வன் ஆகிய 3 காவி பயங்கரவாதிகள் நாட்டு வெடிகுண்டுகளுடன் கைது செய்யப்பட்டனர். தமிழகத்தில் எதுவும் செய்ய முடியாமல் தவிக்கும் காவி பயங்கரவாதிகள், புதுச்சேரியை தங்கள் கட்டுக்குள் கொண்டுவர முயற்சித்து வருகின்றனர்.

Close