பேச்சு வார்த்தையில் உடன்பாடு!சாலை மறியல் ரத்து!

அதிரை அரசு மருத்துவமனையில் 24 மணி நேர பணியை தொடரவும், அதற்காக கூடுதல் மருத்துவர்கள் நியமிக்கவும் கோரி வலியுறுத்தி அதிரை பேரூராட்சி தலைவர்  அஸ்லம் தலைமையில் மாபெரும் சாலை மறியல் போராட்டம் நாளை (30-04-2015) அன்று நடத்த போவதாக அறிவிப்பு செய்து இருந்தார்.

இந்நிலையில் இன்று  (29-04-2015) காலை 10.00 மணியளவில் பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் பேச்சு வார்த்தை துவங்கியது.இதில் அரசு மருத்துவர்கள் , பேரூராட்சி தலைவர் அஸ்லம்,சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் மற்றும் காவல்துறையினர் ஆகியோர் கலந்து கொண்டனர்.இறுதியாக பேச்சு வார்த்தையில் சமரசம் ஏற்ப்பட்டது.

இந்த பேச்சு வார்த்தையில் அதிரை அரசு மருத்துவமனையில் தற்போது 3 மருத்துவர்கள் பணியாற்றி வருகிறார்கள்.இதில் தற்போது காலை நேரத்தில் 2 மருத்துவர்களும் ,இரவு நேரத்தில் 1 மருத்துவர்களும் தற்காலியமாக பணியாற்றிடவும் முடிவு செயப்பட்டது.

மேலும் அதிரை அரசு மருத்துவமனியில் 24 மணி நேரமும் சேவை செய்வதற்கு நிரந்தரமாக ஒரு மருத்துவரை நியமிப்பதற்கு 1 மாத காலத்திற்குள் நியமிப்பதாக இணை இயக்குனர்,தஞ்சாவூர் அவர்களால் தெரிவிக்கப்பட்டதை ஏற்று கொள்வது என முடிவு செய்யப்பட்டது. 

Advertisement

Close