அதிரையில் மதநல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக திகழும் பழஞ்செட்டி தெரு AFG நண்பர்கள் (படங்கள் இணைப்பு)

அதிராம்பட்டினம், டிசெம்பர் 16: அதிரை பழஞ்செட்டித்தெருவில் AFG (ALL FRIENDS GANG) என்னும் பெயரில் நண்பர்கள் குழுவை அப்பகுதி இளைஞர்கள் நடத்தி வருகின்றனர். இந்த குழுமத்தில் இந்து, முஸ்லீம், கிருஸ்தவ பாகுபாடின்றி அனைவரும் மத நல்லிணக்கத்துடன் பழகி வருகின்றனர். இந்த நண்பர்கள் தங்களுக்கு கிடைக்கும் நேரங்களில் பல்வேறு உதவிகளை செய்து வருகின்றனர். அந்தவகையில் ஆண்டுதோறும் டிசம்பர் 16 அன்று தங்கள் குழும நண்பர்கள் தினமாக கொண்டாடும் இவர்கள், இதனை முன்னிட்டு ஏழைகளுக்கும், மாற்று திறணாளிகளுக்கும் உணவு வழங்கி வருகின்றனர். அந்த வகையில் இன்றைய தினம் அதிரையில் உள்ள 100 ஏழைகள், ஏழை பள்ளி குழந்தைளுக்கு உணவு பொட்டலங்களை வழங்கினர்.

நண்பர்கள் தினத்தை தவறான கொண்டாட்டங்களுக்கு பயன்படுத்தாமல் நல்ல காரியங்களுக்காக செலவளிக்கும் AFG நண்பர்கள் குழுமத்திற்கு அதிரை பிறை சார்பாக வாழ்த்துகிறோம்.

Close