அதிரையில் நாம் தமிழர் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் (படங்கள் இணைப்பு)

அதிரை பேருந்து நிலையத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

تم نشره بواسطة ‏‎அதிரை பிறை‎‏ في 15 ديسمبر، 2017

ஒகி புயலின் போது கன்னியாகுமரியில் இருந்து மீன்பிடிக்க சென்ற ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்களை காணவில்லை. அவர்களை தேடும் பணி கடந்த ஒருவாரமாக நடைபெற்று வந்தாலும் மீனவர்களை இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே காணாமல் போன மீனவர்களை மீட்கக் கோரி, கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக மீனவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் மீனவர்களை மீட்பதில் தமிழக அரசு தொடர்ந்து அலெட்சியம் காட்டி வருகிறது. அவர்களை கண்டித்து அதிரை பேருந்து நிலையத்தில் நாம் தமிழர் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இன்று மாலை 5:00 மணியளவில் தொடங்கிய இந்த ஆர்ப்பாட்டத்தில் வழக்கறிஞர் நல்லதுறை கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார்.

Close