அதிரையில் வாய்காலுக்குள் மூழ்கி கிடக்கும் கார்… இயக்கி வந்தது யார்? (படங்கள் இணைப்பு)

அதிரை ஈசிஆர் சாலையில் ஏரிக்கரை பேருந்து நிறுத்தம் அருகே வாய்க்காலுக்குள் இன்று காலை ரெனால்ட் க்விட் கார் ஒன்று கிடந்தது. இதையடுத்து காரில் யாரேனும் உள்ளனரா என்பது குறித்து பொதுமக்கள் சென்று பார்த்தபோது அதில் யாரும் இல்லை. இது குறித்து அதிரை போலீசார் கூறியதில், மதுரையிலிருந்து தந்தையும், மகனும் காரில் திருவாரூர் மாவட்டம் திருக்குவளைக்கு சென்று கொண்டிருக்கும் போது அதிகாலையில் இந்த விபத்து ஏற்பட்டதாகவும், தற்போது இருவரும் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

Close