முத்துப்பேட்டையில் இஸ்லாமியர்கள் பற்றி அசிங்கமாக எழுதியவர்களை தட்டிக் கேட்ட தமுமுக தாரிக் மீது கொலைவெறி தாக்குதல்!

 முத்துப்பேட்டை தமுமுக 3 வது வார்டு செயலாளர் தாரிக் மீது காவி பயங்கரவாதிகளால் கொலைவெறி தாக்குதல்…

இன்று மாலை தமுமுக மாவட்ட துணை செயலாளர் வழக்கறிஞர் தீன் முகம்மது அவர்கள் சொந்தமான இடத்தில் கிரிக்கெட் விளையாடுவதற்க்காக சென்று கொண்டு இருந்த பொழுது அருகே புதியதாக கட்டி கொண்டு இருக்கும் ஒரு மாடி வீட்டில் 10க்கு மேற்ப்பட்ட நபர்கள் நின்று கொண்டு இஸ்லாமிய பெண்கள் மற்றும் ஆண்களை பற்றி அசிங்கமான வார்த்தைகளால் எழுதி இருந்தனர்.

அதை பார்த்த தமுமுக 3 வது வார்டு செயலாளர் தாரிக் அவர்கள் ஏன் இவ்வாறு எழுதியுள்ளீர்கள் என்று கேட்டுள்ளார். அதற்கு மறைத்து வைத்த கட்டை,கம்பி போன்ற ஆயுதங்களால் துலுகன்களை உயிரோடு விடமாட்டோம் என்று அவரை கடுமையாக தாக்கினார்கள்.

தகவல் அறிந்த தமுமுக மாவட்ட துணை செயலாளர் வழக்கறிஞர் தீன் முகம்மது, பேரூர் கழக செயலாளர் சம்சுதீன்,ஒன்றிய செயலாளர் நெய்னா முகம்மது மற்றும் தமுமுக நகர நிர்வாகிகள் முத்துப்பேட்டை காவல் நிலையத்திற்கு நேரில் சென்று பாஜகவை சேர்ந்த 10க்கு மேற்பட்டோர் மீது புகார் கொடுத்து அவர்கள் மீது வழக்குபதிவு செய்யப்பட்டு உள்ளது…

தற்பொழுது இவர் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தகவல்: முத்துப்பட்டை பைசல்

Advertisement

Close