அதிரை APL கிரிக்கெட் தொடர்-அரை இறுதிக்கு முன்னேறியது தஞ்சை ஸ்ரீ கணேஷ் அணி!

அதிரை ஃப்ரெண்ட்ஸ் கிரிக்கெட் கிளப் (AFCC)  நடத்தும் பத்தாம் ஆண்டு மாவட்ட அளவிலான கிரிக்கெட் தொடர் போட்டி  நமதூர் ஷிபா மருத்துவமனை எதிரில் உள்ள கிரானி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. கிரிக்கெட் பந்தில் நடைபெறும் இத்தொடரில் அதிரை அணிகள் உட்பட மாவட்ட அளவிலான தலைசிறந்த கிரிக்கெட் அணிகள் விளையாடி வருகின்றன.10ம் நாளான இன்று ஸ்ரீ கணேஷ் தஞ்சை அணியை எதிர்த்து போலிஸ் அணி விளையாடியது. முதலில் பேட் செய்த ஸ்ரீ கணேஷ் தஞ்சை அணியினர் அந்த அணி வீரர் கோகுல் அவர்களின் அதிரடி சதத்தால் 167 ரண்களை எடுத்தது.

168 ரண்களை கடந்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய போலிஸ் அணி 116 ரண்கள் மட்டுமே அடித்து அணைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது. 

இதன் மூலம் தஞ்சை ஸ்ரீ கணேஷ் அணி வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறியது. அதிரை APL கிரிக்கெட் தொடர் குறித்த தினசரி பதிவுகளுக்கு இணைந்திருங்கள் அதிரை பிறையுடன்.

Advertisement

Close