அதிரை ASC அணி ACL தொடரின் லீக் போட்டியில் அபார வெற்றி!

அதிரை ப்ரண்ட்ஸ் கிரிக்கெட் கிளப்(AFCC) நடத்தும் இரண்டாம் ஆண்டு  ACL(அதிரை சாம்பியன் லீக்) T20 தொடரின் இன்றைய போட்டியில் B பிரிவில் இடம் பெற்றுள்ள AFCC B அணியும் ASC அணிகளும் மோதின. முதலில் பேட் செய்த AFCC B அணி ASC அணி வீரர்களின் அபாரமான பந்துவீச்சால் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 96 ரண்களை குவித்தது. அந்த அணி அதிகபட்சமாக ஃபவாஜ் அவர்கள் 27 ரண்களை விளாசினார். ASC அணியை பொருத்தவரை அந்த அணியின் பந்துவீச்சாளர் ரிஜ்வான் அபாரமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
97 ரண்கள் குவித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ASC அணி அந்த அணி வீரர்கள் ஹிதாயத்துல்லாஹ், மர்ஜுக் ஆகியோரின் அபாரமான பேட்டிங்கால் சுலபமான வெற்றியை பெற்றது. அதிகபட்சமாக ASC அணி வீரர் ஹிதாயத்துல்லா 34 ரண்களை குவித்தார். AFCC B அணியை பொருத்தவரை அந்த அணி வீரர் தாரிக் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
நாளைய தினம் காலை 7 மணிக்கு RCCC அணியை எதிர்த்து PCC அணியும் 11 மணிக்கு நடைபெறும் இரண்டாவது ஆட்டத்தில் சிட்னி ஃபிரண்ட்ஸ் அணியை எதிர்த்து AFCC B அணி விளையாடவுள்ளது.

Advertisement
அதிரையில் குறைந்த மாத தவணையில் வீட்டு மனை பிரிவுகள்

Close