Advertisement

' />

அதிரையில் நடைபெறயிருக்கும் சாலை மறியல் குறித்து சிவா மாணிக்கம் அவர்களின் கருத்து!

அதிரைக்கு 24 மணி நேர சேவையை கொண்டு வருவதற்காக பல கட்ட முயற்சிக்கு பின்பு சாலை மறியல் போராட்டதை சமூக ஆர்வலர்கள் உதவியுடன் கையில் எடுத்திருக்கும் நமதூர் பேருராட்சி மன்ற தலைவர் திரு.அஸ்லம் அவர்களுக்கு எனது முதல் கண் நன்றியை தெரிவித்து கொள்கிறேன் .

எங்கள் பகுதியில் கடந்த காலங்களில் குடிநீர்  பஞ்சம் தலைவீரித்து ஆடிய பொழுது நீங்கள் இரவு பகல் என்று பாராமல் எங்கள் பகுதிக்கு அடிகடி விஜயம் செய்து தண்ணீர் வரும் நேரங்களை பொது மக்களிடம் எடுத்துரைத்து தண்ணீரை சேமிப்பு  செய்ய உதவியாக இருந்து வந்தது அனைவரும் அறிந்ததே .அதற்க்கு மேலாக ஊரின் வறட்சியை போக்க அணைத்து குளங்களுக்கும் தண்ணீரை நிரப்ப செய்தீர் .இதனால் எங்கள் பகுதியில் குடிநீர் இல்லா நிலை இருந்து வருகிறது .அதிரை மக்களுக்கு சேவை செய்ய எப்பொழுதும் உங்கள் நேரத்தை செலவு செய்து கொண்டு இருக்கும் உங்கள் முயற்சிக்கு கடவுள் துணை நிற்பான் .

மேலும் அதிரையில்  அரசு பொது மருத்துவமனையில் மருத்துவ வசதி இல்லாத காரணத்தினால் வேறு ஊர்களுக்கு மருத்துவ தேவை உள்ளவர்களை அழைத்து செல்ல நிர்பந்தம் ஏற்படுகிறது என்ற சூழலை போக்குவதற்கு அதிரையில் மருத்துவ வசதியை கட்டாய படுத்த நீங்கள் முயற்சி எடுத்ததற்கு மிக்க நன்றி .

உங்களில் முயற்சிக்கு தடை போடும் விதமாக எது நடந்தாலும் அதிரை பொது மக்கள் மற்றும் நல்லெண்ணம் கொண்ட சமூக ஆர்வலர்கள் துணை நிற்பார்கள் .நீங்கள் இந்த மறியல் போராட்டத்தை வெற்றி  மையமாக நடத்தி அரசுக்கு எச்சரிக்கை மணி அடியுங்கள் .அப்பொழுது தான் அரசு கீழ் பணிந்து நமதுருக்கு எல்ல நலனையும் செய்யும் .24 மணி நேர சேவை எல்லாம் மதத்தவர்களுக்கு அவசியமான ஒன்று .இதில் எந்த ஒரு பேதமும் இன்றி ஒற்றுமையாக அஸ்லம் அவர்களுக்கு ஆதரவு கொடுத்து இந்த அர போராட்டத்தை வெற்றி பெற செய்ய நமதூர் மக்களுக்கு கடமை .இந்த போராட்டம் அதிரை வரலாற்று சுவடுகளில் பொறிக்க பட வேண்டும் .அதிரை மக்களும் போராட்டம் செய்து அரசிற்கு எச்சரிக்கை மணி அடிப்பார்கள் என்று வாய் மொழி இட வேண்டும் .அரசு அதிரை மக்களை ஏமாற்றும் நிலை மாற வேண்டும் .துணிந்து நின்று அரசின் சலுகைகளை பெற்று அதிரைக்கு புதுமை சேர்க்கும் விதமாக நவீன வசதிகளை கொண்டு அதிரையை வளம் பெற செய்ய முன் வரவேண்டும் .

அதிரை மக்களுக்கு விழிர்புணர்வு ஏற்படுத்திய தலைவர் அஸ்லம் அவர்கள் தொடர்ந்து பொது மக்களுக்கான சேவையில் ஈடுபட்டு அதிரையை வளமான ஊரக மற்ற இறைவனிடம் பிரதித்த வண்ணமாக இந்த அறிக்கையை நிறைவு செய்கிறேன் .

இப்படிக்கு
சிவா மாணிக்கம் BA 
முத்தம்மாள் தெரு 
அதிராம்பட்டினம்.

Advertisement

Close