முத்துப்பேட்டை அருகே வெடி குண்டுகளுடன் நின்ற மினி வேன்!போலீசார் அதிர்ச்சி!

முத்துப்பேட்டை  அருகே  95  வெடி குண்டுகளுடன்  நின்ற வேனை போலீசார் பறிமுதல் செய்தனர்.   இது  தொடர்பாக  4  பேரை  பிடித்து  விசாரித்து  வருகின்றனர். 

முத்துப்பேட்டை  அருகே தில்லை விளாகத்தில் நேற்று மாலையில்  இருந்து  ஒரு மினி வேன்  சந்தேகத்துக்கிடமாக   நின்று  கொண்டிருந்தது.

இது  பற்றிய தகவல் கிடைத்ததும், இரவு 9 மணியளவில் முத்துப்பேட்டை இன்ஸ்பெக்டர்  ராஜ்குமார்  மற்றும் போலீசார் சென்று வேனில் சோதனை நடத்தினர்.

இதில் அந்த வேனில் சணல் பயன்படுத்தி செய்யப்பட்ட 95 நாட்டு வெடிகுண்டுகள் இருந்தன.

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார் வேனுக்கு அருகில் நின்று கொண்டிருந்த அதன்  டிரைவர் உள்ளிட்ட 4 பேரை பிடித்து போலீஸ் நிலையத்துக்கு கொண்டு  சென்று   விசாரணை   நடத்தி  வருகின்றனர்.

மேலும் வெடி குண்டுகளுடன் இருந்த வேனையும் காவல் நிலையம் கொண்டு சென்றனர்.

நன்றி :MUTHUPET NEWS

Advertisement

Close