Advertisement

' />

அதிரையில் குறைந்த விலையில் கிடைக்கும் வண்ண மீன்கள்!(படங்கள் இணைப்பு)

வீடுகளில் மீன் வளர்ப்பது இன்றைக்கு முக்கியமான விஷயமாக மாறியிருக்கிறது. அழகுக்காக மட்டுமின்றி, அமைதிக்காகவும் மீன் வளர்க்கிறார்கள் பலர்.இந்த வகையில் அதிரை சேர்மன் வாடி பேருந்து நிலையம் அருகில் டால்பின் வண்ண மீன்கள் நிலையம் நடத்தி வரும் கீழத்தெருவை சேர்ந்த தீன் முஹம்மத் அவர்களை சந்தித்தோம்.

அதிரையில் கடந்த 4 வருடங்களாக வண்ண மீன் நிலையம் நடத்தி வருகிறேன். எங்களிடம் பைட்டர், ஏஞ்சல்மீன், மோலி, கப்பீஸ், எஞ்சல், டைகர், கோல்டு பிஷ் போன்ற பல வகையான வண்ண மீன்கள் குறைந்த விலையில் எங்கள் வண்ண மீன் நிலையத்தில் கிடைக்கும் என்றார். மேலும் மீன்களுக்கு தேவையான உணவு வகைகள்,செடிகள், கண்ணாடி தொட்டிகள் மிக குறைந்த விலையில் கிடைக்கும் என்றார்.மேலும் வண்ண மீன் வளர்ப்பவர்களுக்கு சில அறிவுரைகளையும் கூறினார். 

1)மீனை வாங்கி வந்த உடன் வீட்டில் உள்ள  ஒவ்வொருவரும் அதற்க்கு  தீனி  போட முயல்வது தான் முதல் பிரச்சினை. மீனிற்கு ஒரு நாளைக்கு    இரண்டு முறைக்கு மேல் உணவு  போடக் கூடாது. காலை ஒரு முறை மாலை ஒரு முறை   உணவிட்டால் போதுமானது.மீன்கள் உணவில்லாமல் 2 ,3 தினங்கள் கூட உயிர்வாழும்.

2)மீனை வளர்ப்பது  குடுவையாக இருந்தாலும் சரி  தொட்டியாக  இருந்தாலும் சரி ,மீனின்   உருவ வளர்ச்சிக்கு ஏற்றவாறு தொட்டியில்  மீன்களை இட வேண்டும். அளவுக்கு அதிகமாக   தொட்டியில்  மீன்களை வளர்த்தாலும் சுவாசிக்க தேவையான   காற்று இல்லாமல் இறந்து விடும்.

3)மீன் நன்கு சுவாசிக்க  ஏரேட்டர்  உபயோகிப்பதுவும் சிறந்தது.

4)உணவாக இடுவதில் தினம்  தயார் செய்யபட்ட  கடைகளில் விற்க்கும் உணவுகள் மட்டும் இன்றி  , மண்புழு போன்றாவற்றையும் அடிக்கடி கொடுக்கலாம். மீனின் வளர்ச்சிக்கு இது உதவும்.மீன் விற்கும் கடைகளில்   இதற்குண்டான  செடிகள்  விற்கப்படுகின்றன. செடிகளை உடன் வளர்ப்பதால் மீனுக்கு தேவையான ஆக்சிஜனும் கிடைக்கும்.

5)மீன்  வளர்க்கும் தொட்டியில்   குறைந்த பட்சம்  20% நீரை  தினம் எடுத்து விட்டு  புதிய நீரை  ஊற்றி வர வேண்டும். அல்லது ஒரு   நாள் விட்டு ஒரு நாள்  நீரை முழுவதுமாக மாற்றவும் செய்யலாம்.

6)வளர்க்கும் மீன்களில் எதேனும் ஒன்று இறந்து விட்டால் உடன் அதை அகற்றி விட வேண்டும். இல்லையேல் அதனால் ஏற்படும் கிருமிகள் மற்ற மீன்களை பாதிக்கும் என்றார்.

Advertisement

Close