Advertisement

' />

அதிரையில் நடைபெறும் சாலை மறியல் குறித்து சேர்மன் அஸ்லம் அவர்களின் பேட்டி!(வீடியோ)

சமீப காலங்களில் அதிரை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளை எடுத்துக் கொண்டால் சாலை விபத்துகள் அதிகரித்துக் கொண்டு வருகின்றன. மேலும் இது போன்ற விபத்துகளில் அதிகம் இரவு நேரங்களில் தான் நடக்கின்றன. இந்த விபத்துகளில் காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டியிருந்தால் பட்டுக்கோட்டை, தஞ்சை போன்ற பிற ஊர்களுக்கு செல்ல வேண்டியுள்ளது. அதற்குள் காயமடைந்தவரின் உயிர் பிரிந்து விடும் துயர நிலை தொடருகிறது. 

மேலும் இரவு நேரங்களில் ஒருவருக்கு திடீர் என்று உடல் முடியாமல் போனால் முதலுதவிக்கு கூட இரவு நேர மருத்துவமனை என்று ஒன்று இல்லாமல் இருந்து வந்தது.  இதனை அடுத்து அதிரை அரசு மருத்துவமனையில் 24 மணி நேர மருத்துவ வசதியை ஏற்படுத்தி தர வேண்டி பேரூராட்சி மன்ற தலைவர் அஸ்லம் அவர்களின் தலைமையில் கடந்த (30-03-2015) 12 வேன்களில் அதிரையில் உள்ள அனைத்து தெருவாசிகள் திரண்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.இதற்கு 300க்கும் மேற்ப்பட்ட ஆண்களும்,பெண்களும் தஞ்சை சென்று மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தனர்.

இதுவரைக்கும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதால் வரும் (30-04-2015)அன்று காலை 10.00 மணியளவில் அதிரை பேருந்து நிலையம் அருகில் மாபெரும் சாலை மறியல் நடைபெற முடிவு செய்யப்பட்டது.இந்த சாலை மறியல் மறியல் குறித்து பேரூராட்சி மன்ற தலைவர் அஸ்லம் அவர்கள் நமக்கு அளித்த பேட்டி இதோ 

Advertisement

Close