ஃபேஸ்புக்கில் ஆர்வ கோளாரில் ஸ்டேட்டஸ் போடும் சகோதரர்களுக்கான எச்சரிக்கை பதிவு!

ஒருவரிடம் இருந்து அவர் பற்றிய தகவல்களை எளிமையாக பெற வேண்டுமென்றால் அவரிடம் முகநூலில் அவரது நண்பர் அல்லது உறவினர் போல் முகநூலில் போலி ஐ.டி திறந்து அவரிடம் பல தகவல்களை எளிமையாக பெற்றுக் கொள்ளலாம். இது போன்று தற்போது திருடர்கள் பலர் முகநூலில் போலி ஐ.டி கள் மூலம் ஒருவரது அனைத்து தகவல்களையும் பெற்றுக் கொண்டு அவரது வீட்டில் தங்களது கைவரிசையை காட்டுகின்றனர்.

இது ஒருபுறம் இருக்க சில முகநூல் ஆர்வ கோளாறுகள் “குடும்பத்துடன் கோடை சுற்றுல்லா” என்றும் “வீட்டில் தனிமையில் நான் (feeling alone at home)” என்று எழுதி புகைப்படங்களுடன் பதிவிடுகின்றனர். இது தவறு இல்லை என்றாலும் முகநூலில் உலாவும் சில திருடர்களுக்கு இந்த ஸ்டேட்டஸ் “என் வீட்டில் யாரும் இல்லை, போய் திருடிக் கொள்ளவும்” என்பது போல் உள்ளது. இதை பார்க்கும் திருடர்கள் அடுத்ததாக ஸ்டேட்டஸ் பதிவிடும் நபரின் முழு விபரத்தை தேடும் பொழுது அந்த நபரின் முழு வீட்டு முகவரியும் கிடைத்து விடுகிறது.

இவ்வாறு முகநூல் மூலம் ஏமாற்று வேலைகள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இது கோடைகாலம் என்பதால் கோடையில் குடும்பத்துடன் உல்லாச சுற்றுலா செல்பவர்கள் முகநூலில் ஸ்டேட்டஸ் மற்றும் படங்கள் பதிவிடும் போது எச்சரிக்கையாக இருக்கவும்.

அதுபோல் முகநூலில் நண்பர் போலவோ, உறவினர் போலவோ புதிய ஐடியில் உங்களுக்கு மெசேஜ் வந்தால் சம்பந்தப்பட்ட நபரிடம் தொடர்பு கொண்டு விசாரித்து பின்னர் மெசேஜ் செய்யவும்.

எச்சரிக்கை: இணையதளம் வாயிலாக பல குற்றச்செயல்கள் நடந்து வருகிறது. சமுக வலைதளங்களை உபயோகிப்பவர்கள் என்றும் விழிப்புடன் எச்சரிக்கை கையாள வேண்டும். இது காலத்தின் கட்டாயம்.

சிந்திப்போம்! செயல்படுவோம்!

ஆக்கம்: நூருல் இப்னு ஜஹபர் அலி

Advertisement

Close