Advertisement

' />

அதிரை மக்களுக்கு விரைவில் இலவச மிக்சி, கிரைண்டர், மின் விசிரி!

கடந்த 2011 ஆம் ஆண்டு மே மாதம் தமிழகத்திற்கு புதிய  ஆட்சி வந்தது. அப்போது தமிழக மக்களுக்கு கிரைண்டர், மிக்ஸி, மின் விசிறி ஆகிய அடிப்படை தேவையுள்ள இந்த 3 பொருட்களை ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் இலவசமாக வழங்கப்படும் என தேர்தல் வாக்குறுதியாக அளிக்கப்பட்டது.இந்த வாக்குறுதி பல ஊர்களிலும் நிறைவேற்றப்பட்டு மக்களுக்கு இலவச பொருட்கள் சென்றடைந்தது. 
இந்நிலையில் அதிரையில் அனைத்து ரேசன் அட்டைதாரர்களுக்கும் இலவச மிக்சி, கிரைண்டர், மின் விசிரி உள்ளிட்டைவை விரைவில் அதிரை VAO முன்னிலையில் வழங்கப்படவுள்ளதாக அதிரை அதிமுக வினர் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்த இலவச பொருட்கள் அதிரை அரசு மகளிர் பள்ளிக்கு இன்று கொண்டுவரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது..

Advertisement

Close