Advertisement

' />

அதிரையில் உடைந்த நிலையில் உள்ள மின் கம்பத்தை மாற்ற கோரி இஸ்லாமிய ஜனநாயக முன்னணியினர் கோரிக்கை!

அதிரையில் பல பகுதிகளில் உடைந்த நிலையில் உள்ள மின் கம்பத்தை மாற்ற கோரி இஸ்லாமிய ஜனநாயக முன்னணியினர் கோரிக்கை வைத்து உள்ளனர்.இன்று காலை அதிரை நகர செயலாளர் முஹம்மத் முகைதீன் தலைமையில் அதிரை மின் வாரிய உதவி மின் பொறியாளரை சந்தித்து கோரிக்கை மனு ஒன்று அளித்து உள்ளனர்.

அதில் அதிரையில் பல பகுதிகளில் மின் கம்பம் மோசமாகவும், சேதமடைந்தும் அபாய நிலையில் உள்ளது .மேலும் அதிரையில் முக்கியமாக ஜாவியா ரோட்டில் உள்ளதையும் மற்றும் 7 இடங்களை குறிப்பிட்டு உடனடியாக மாற்றவும் கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்த கோரிக்கைகளை நிறைவேற்றி தருகிறேன் என்று உதவி மின் பொறியாளர் உறுதி அளித்து உள்ளார்.பார்ப்போம் நடவடிக்கை எடுக்கப்படுமா? என்று.     

Advertisement

Close