பட்டுக்கோட்டையில் நடைபெறயிருந்த ஆர்ப்பாட்டம் ரத்து!அதிரை இளைஞர் மீட்பு!

பட்டுக்கோட்டையிலிருந்து அதிரைக்கு நேற்று இரவு 11.00 மணியளவில் சென்று கொண்டிருந்த மாவட்ட பொருளாளர் அதிரை ஹாஜா,அதிரை நகர நிர்வாகி தமீம் அன்சாரி,செய்யது,மற்றும் ராஜிக் ஆகியோரை 15 ம் மேற்ப்பட்டோர் வழிமறித்து தாக்குதல் நடத்தி உள்ளனர்.

மேலும் இதில் ராஜிக் என்பவரை அவர்கள் கடத்தி சென்று விட்டனர். அஹ்மத் ஹாஜா அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் காவல்துறையில் புகார் செய்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று இன்று மாலை 4 மணிக்கு பட்டுக்கோட்டை காவல் நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டு இருந்தது. இதனையடுத்து கடத்தி செல்லப்பட்ட அதிரை இளைஞரை ஒரத்தநாடு தாலுகா டிஎஸ்பி செங்கமலக்கண்ணன் தலைமையில் போலீசார் மீட்டு பட்டுக்கோட்டை காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். இதனால் ஆர்ப்பாட்டம் ரத்து செய்யப்பட்டது.

தகவல்:மதுக்கூர் ஃபவாஸ்

Advertisement

Close