அதிரையில் பரபரப்பு!

காட்டுப்பள்ளி கந்தூரி ஊர்வலம் இன்று (20-04-2015) மாலை 4.30 மணியளவில் காட்டுப்பள்ளி தர்காவில் இருந்து புறப்பட்டது. இதனையடுத்து கந்தூரி என்ற பெயரில் நம் முன்னோர்கள் செய்த பாவத்தைஇப்போதும் நம் சகோதர்கள் நரகத்திற்கு செல்வதை மீட்டு எடுப்போம் என்ற கோரிக்கையில் பெரிய ஜும்மா பள்ளி அருகில் அதிரை சாகுல் தலைமையில் 10க்கும் மேற்ப்பட்டோர் கந்தூரி ஊர்வலத்தை தடுக்க முயற்சி செய்தனர்.கந்தூரிக்கு எதிரான கோசங்களும் எழுப்பட்டது.

இதையடுத்து அவர்களை காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர். இறுதியாக அனைவரும் கலைந்து சென்றனர்.இதில் இஸ்லாமிய ஜனநாயக முன்னணியினரும் கலந்து கொண்டனர். இதில் சில மணித்துளிகள் அந்த பகுதி பரப்பரப்பாக காணப்பட்டது. 

Advertisement

Close